என்றாவது ஒரு நாள் சபிக்கப்படுவோம் !!
நாட்டில் போசாக்கு குறைபாடு உள்ளது என்பதை தான் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நாட்டில் போசாக்கு குறைபாடு 2 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என்றார்.
போஷாக்கு குறைபாட்டை யாரோ ஒருவர் 100 சதவீதமாக இல்லாதொழிப்பார் என்பது விசித்திரக் கதை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இந்த போசாக்கு குறைபாடு அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் எம்மிடமிருந்து சென்றுவிடலாம். ஆனால் எமது பிள்ளைகள் மனதளவில் தாழ்ந்த, ஆற்றல் குறைந்த குழந்தைகளாக மாறினால், என்றாவது ஒரு நாள் நாம் சபிக்கப்படுவோம். எனவே நாம் அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.