தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது – உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு..!!
அந்தேரி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் உத்தவ் தாக்கரே அணிக்கு தீப்பந்தம் சின்னத்தை ஒதுக்கியது. மேலும் அவர்கள் அணிக்கு சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே பெயர் வழங்கப்பட்டது. முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் இரட்டை வாள் கேடயம் சின்னம் ஒதுக்கியுள்ளது. பால்தாக்கரேவின் சிவசேனா என்ற பெயரை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கியது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறது என உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே அணியினர் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில் நாங்கள் தேர்வு செய்து அனுப்பிய பரிந்துரை பட்டியலை, ஷிண்டே தரப்பினர் பரிந்துரை பட்டியல் அளிப்பதற்கு முன்பே ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு விட்டனர். எங்கள் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தவற்றைப் பார்த்து, காப்பி அடித்து, அதே விபரங்களை ஷிண்டே தரப்பினரும் தங்கள் பரிந்துரை பட்டியலில் தெரிவித்தனர். இதற்கு பின் தான், எங்கள் பரிந்துரை பட்டியல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆணையத்தின் இந்த ஒருதலைபட்சமான செயல்பாடுகளை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.