இலங்கையின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிப்பு : மார்ட்டின் ரைசர் !!
உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின் புதிய துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர், நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது உலக வங்கியினால் இலங்கையின், ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை முன்னெடுப்பது குறித்தும், நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான ஆதரவளிப்புகள் குறித்தும் கலந்துரையாடியுள்னர்.
மேலும், கடன் மறுசீரமைத்தல் மற்றும் விவேகமான மேலாண்மை மற்றும் அதிகரித்த வெளிப்படைத்தன்மை மூலம் அதை ஒரு நிலையான பாதையில் வைத்திருப்பது முக்கியமானது எனவும், இலங்கையின் மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற அபிவிருத்தி பங்காளிகளுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவோம் எனவும் உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின் புதிய துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் தெரிவித்துள்ளார்.