மதுபான கொள்கை முறைகேடு- டெல்லியில் 25 இடங்களில் இன்று அமலாக்கத்துறை சோதனை..!!
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. 2021-2022 ஆண்டில் அமல்படுத்தியதில் நடந்த முறைகேடு குறித்து டெல்லி கவர்னர் பரிந்துரையின்பேரில் இந்த விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் 11 கலால் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா மீதும் வழக்கு பதிவாகி இருந்தது. இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை இதுவரை பல சோதனைகள் நடத்தி இருந்தது. மதுபான வியாபாரி சமீர் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 25 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். மதுபான விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு தொடர்புடைய தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.