ஐதராபாத் மாநகரத்திற்கு 2022-ம் ஆண்டிற்கான உலக பசுமை நகர விருது அறிவிப்பு..!!
சர்வதேச தோட்டக்கலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ‘உலக பசுமை நகர விருதுகள் 2022’ என்ற விருதை ஐதராபாத் பெற்றுள்ளது. தென் கொரியாவின் ஜெஜூவில் நடைபெற்ற தோட்டக்கலை உற்பத்தியாளர்களின் சர்வதேச சங்கம் விருதுகள் விழாவில், ஐதராபாத் 6 பிரிவுகளிலும் ‘உலக பசுமை விருதை’ வென்றது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய நகரம் தெலுங்கானா தலைநகரான ஐதராபாத் மட்டுமே.
ஐதராபாத், அவுட்டர் ரிங் ரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பசுமையை மேம்படுத்துவதற்காக மதிப்புமிக்க ஏஐபிஹச் குளோபல் ‘வேர்ல்ட் கிரீன் சிட்டி விருதுகள் (உலக பசுமை நகர விருதுகள்) பெற்றுள்ளது. ஐதராபாத் மாநகரத்திற்கு புகழ்பெற்ற “சர்வதேச தோட்டக்கலை உற்பத்தியாளர்கள் சங்கம்” விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி என்று தெலுங்கானா முதல் மந்திரி கே சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். இந்த சர்வதேச விருதுகள் தெலுங்கானா மற்றும் நாட்டின் நற்பெயரை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த சர்வதேச விருதுகளுக்கு இந்தியாவின் ஒரே நகரமாக ஐதராபாத் தேர்ந்தெடுக்கப்பட்டது பெருமைக்குரியது என தெரிவித்தார்.