இந்தியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பை இன்று தொடங்கி வைக்கிறார் உள்துறை மந்திரி அமித்ஷா..!!
இந்தியாவில் முதல் முறையாக மத்தியபிரதேசத்தில் இந்தியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை உள்துறை மந்திரி அமித் ஷா இன்று தொடங்கி வைக்கிறார். முன்னதாக இந்தியில் மருத்துவக் கல்வியை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இன்று தொடங்கி வைக்க உள்ளதாக மத்த்ய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்திருந்தார். அப்போது இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு புத்தகங்களை அமித்ஷா வெளியிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்தியாவில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு இந்தியில் கற்பிப்பது இதுவே முதல் முறை என்றும், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை இந்தியில் கற்கவோ, கற்பிக்கவோ முடியாது என்ற எண்ணத்தை இது மாற்றும் என்றும், இந்தியில் படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற எண்ணத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இது ஒரு படி என்றும் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்திருந்தார். 13 அரசு மருதுவக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உடற்கூறியல் ,உடலியல் , உயிர் வேதியியல் ஆகிய 3 பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்படவுள்ளது