ஜனாதிபதியின் தலைமையில் உணவுப்பாதுகாப்பு தேசிய செயற்றிட்டம் ஆரம்பம்!! (PHOTOS)
உணவுப்பாதுகாப்பு மற்றும் போசனையினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு கிராமிய பொருளாதார புனர்வாழ்வு கேந்திரத்தை வலுவூட்டம் செய்யும் பல் பிரிவு கண்காணிப்பு பொறிமுறையினை அரச அலுவலர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டம் சனிக்கிழமை (15) அம்பாறை அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ டக்ளஸ் தலைமையில் அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும், இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டீ
வீரசிங்க, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதவுல்லாஹ், பைசால் காசிம், டீ.கலையரசன், முன்னாள் அமைச்சர் தயா கமகே, அனோமா கமகே, முன்னாள் கிழக்கு மாகாண தவிசாளர் கலப்பதி உட்பட ஜனாதிபதியின் செயலாளர், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், முப்படைகளின் தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.