ஜனாதிபதி திரௌபதி முர்மு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்..!!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு புதுடெல்லி ராணுவ மருத்துவமனையில் (பரிந்துரை மற்றும் ஆராய்ச்சி) நேற்று கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் கூறுகையில், ” அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்று குறிப்பிட்டது. ஜனாதிபதி முர்மு இரண்டு நாள் பயணமாக அசாமுக்கு சென்றிருந்தார். இதன்போது, குவஹாத்தியில் உள்ள சக்திபீட காமாக்யா கோயிலுக்கு முர்மு வழிபாடு செய்தார்.