கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தினரால் ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் கௌரவிப்பு!! (படங்கள்)
கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தினரால் ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் கழகத்தின் தகவல் தொடர்பு ஊடக செயலாளராக தெரிவு செய்யப்பட்டார்.
கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழக 2023 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கான கழக வருடாந்த பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (16)கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் மாலை சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தின் ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் கழகத்தின் தகவல் தொடர்பு ஊடக செயலாளராக தெரிவு செய்யப்பட்டார்.குறித்த பாராட்டு நிகழ்வில் புதிய தலைவர் ஏ.டபிள்யூ.எம் ஜெஸ்மீன் பொதுச்செயலாளர் ஏ.ஜே.சமீம் பொருளாளர் நதீர் பாறுக் உட்பட பல்வேறு பதவி நிலைகளுக்கு நிர்வாக சபை உறுப்பினர்கள் இணைந்து கொண்டிருந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் நாட்டின் அசாதாரண சூழ்நிலை மற்றும் கொரோனா அனர்த்த காலங்களில் பிராந்தியத்தில் சிறப்பாக செயற்பட்ட ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் கழகத்தின் தகவல் தொடர்பு ஊடக செயலாளராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகமானது சுமார் 35 வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வருவதுடன் இக்கழகத்தில் பல்லின மக்கள் உள்வாங்கப்பட்டு இயங்குவதுடன் பிரதேச வாதமற்ற ஒரு சிறப்பான கழகமாக இப்பிராந்தியத்தில் செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”