;
Athirady Tamil News

விசுவமடு கல்விசார் அறுவடை போற்றல் விழா !! (படங்கள்)

0

விசுவமடு விஞ்ஞான கல்வி நிலையம் நடத்திய அறுவடை போற்றல் விழா கடந்த 15.10.2022 சனி மாலை விசுவமடு மத்திய சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது

கடந்த இரண்டு ஆண்டுகளில் 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட விஞ்ஞானத் துறைக்காகவும் 20 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலை மற்றும் வணிகத் துறைக்காகவும் விசுவமடு பிரதேசத்தில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியமையை கௌரவிக்கும் முகமாகவும் தற்போது கற்கும் மாணவர்களுக்கு ஊக்கம் வழங்கும் முகமாகவும் இந்த விழா நடத்தப்பட்டது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி ஸ்ரீசற்குணராஜா கலந்து கொண்டார்

சிறப்பு விருந்தினர்களாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரும் கிளிநொச்சி கல்வி அபிவிருத்தி நிலைய தலைவருமாகிய மருத்துவர் த. சத்தியமூர்த்தி, பிரபல உயிரியல் ஆசான் வ.சி. குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்

கௌரவ விருந்தினராக வலிகாமம் கல்வி வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் ஞான. ஆதவன் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச. லலீசன் மற்றும் பிரதேச பாடசாலை அதிபர்கள் கலந்து கொண்டனர்.

கல்வி நிலையம் தொடர்பான நோக்க உரையை நிறுவனத்தை நெறிப்படுத்தி வரும் பொறியியலாளர் பொ. கெங்கேஸ்வரன் ஆற்றினார்.

மாணவர்களிடையே கல்வித் திறமை மற்றும் கலைத் திறமை சார்ந்த அடிப்படையில் சிவகுமார் கருஷா என்ற மாணவி சாதனை மாணவி என்ற விருதையும் ரூபாய் 25000/- பணப் பரிசும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். துணைவேந்தர் மாணவிக்கான கௌரவத்தை மேற்கொண்டார்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.