தந்தைக்கு புதிய வேலை கிடைத்ததை கொண்டாடும் சிறுமி..!!
தனது தந்தைக்கு புதிய வேலை கிடைத்ததை கொண்டாடும் சிறுமியின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. உலகில் எத்தனையோ உறவுகள் இருந்தாலும், பெண்களுக்கு பிடித்தமான உறவு என்றால் அது அவர்களின் தந்தையாக மட்டுமே இருக்க முடியும். ஒரு தந்தைக்கும் அவருடைய மகளுக்கு இடையேயான உறவு என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத தூய்மையை உடையது. ஸ்விக்கி நிறுவனத்தில் தனது தந்தைக்கு வேலை கிடைத்து விட்டதை கொண்டாடும் சிறுமியின் வீடியோ பார்ப்பவர்களின் கண்களில் ஆனந்த கண்ணீர் வரவழைக்கிறது. அந்த வீடியோவில், தன் கைகளால் முகத்தை மூடியபடி சிறுமி நிற்கிறாள். அவள் முன்னால் நிற்கும் அவளது தந்தை, ஸ்விக்கியின் முத்திரை பதித்த டி-சர்ட்டை காட்டுகிறார். தன் கண்களை திறந்து பார்க்கும் சிறுமி, தந்தைக்கு புதிய வேலை கிடைத்து விட்டதை அறிந்து ஆனந்தத்தில் துள்ளி குதிப்பதுடன், தந்தையும் கட்டி அணைத்துக் கொள்கிறாள். பூஜா அவன்திகா என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு உள்ள இந்த வீடியோ மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்றுள்ளது. வீடியோவை இணையவாசிகள் அதிகம் பகிந்து வருகின்றனர்.