;
Athirady Tamil News

யாழ் மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை!!

0

யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக யாழ் மாவட்ட இந்து கலாச்சார பேரவையின் செயலாளர் எம்.ரி.எஸ். இராமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண ஊடக மன்றத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனை குறிப்பிட்டார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்வதற்காக தனது கல்வி நிலையத்தில் 23 ஆயிரம் வரையானவர்கள் வெளிநாட்டு மொழியை கற்று நாட்டின் பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக யாழ் மாவட்டத்திலுள்ள அதிக வசதி வாய்ப்பு படைத்த இளைஞர்கள் வெளிநாட்டு போதை பொருட்களை பயன்படுத்தி தம்மையும் தமது கலாச்சாரத்தையும் அழித்து வருகின்றனர். எனவே குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர், வடக்கு மாகாண ஆளுநர், இராணுவ தலைமை அதிகாரி உள்ளிட்டோர் தமது கல்வி நிலையங்கள் ஊடாக கருத்தமர்வுகளை ஏற்படுத்துவதன் மூலம் போதைப் பொருள் பாவனையை யாழ் மாவட்டத்தில் கட்டுப்படுத்த முடியும் என்றும் இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன் போதைப் பொருளை ஒழிப்பதற்கான செயல்திட்ட கருத்தரங்குகளையும் இளைஞர் யுவதிகள் மத்தியில் எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இதனை கருத்தில் கொண்டு அனைவரும் போதையற்ற நாட்டை உருவாக்க முன் பெற வேண்டும் என்றும் இதன் போது கேட்டுக் கொண்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.