சிபெட்கோவின் ஆதிக்கம் அகலும் !!
பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள பெற்றோலியப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலம், உலகளாவிய வழங்குநர்களை சில்லறை விற்பனையாளர்களாக நுழைய அனுமதிக்கும் என்று வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஜெட் எரிபொருள் மீதான இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (சிபெட்கோ) முழு ஆதிக்கத்தை அகற்றி எரிசக்தி துறையை தாராளமயமாக்கும் என்றும் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தத் திருத்தத்தை நிறைவேற்ற ஆதரவளித்த ஜனாதிபதி, அரசாங்க எம்.பிக்கள் மற்றும் அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.