நீண்ட கால வரலாற்றை கொண்ட இந்து மதத்தின் வரலாற்றை அறியும் வாய்ப்பு குறைவு! துணைவேந்தர் தெரிவிப்பு!!
தற்போதைய மாணவர்கள் இந்து சமய வரலாறுகளை கற்பதற்குரிய வழிமுறைகள் தற்போது காணப்படுவதில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் தகைசார், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி. பத்மநாதனின் திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் பற்றிய மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா இன்று யாழ். பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்து கற்கைகள் பீடத்தின் இந்து நாகரிகத்துறை ஏற்பாட்டில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் தலைமை உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறிப்பாக மகாபாரதம் , ராமாயணத்தை, தற்போதுள்ள மாணவர் சமூகமானது சினிமா மூலம் தொலைக்காட்சி நாடகங்கள் மூலம் மாத்திரமே பார்வையிடக்கூடிய நிலை காணப்படுகின்றது
இதன் காரணமாக நீண்ட கால வரலாற்றை கொண்ட நமது இந்து மதத்தின் வரலாறுகளை தற்போதுள்ள இளைஞர்கள் அறிவதற்கு சந்தர்ப்பங்கள் குறைவாக காணப்படுகிறது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”