போதைக்கு அடிமையான இளைஞனை பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய்!!
போதைக்கு அடிமையான தனது 17 வயதான மகனை திருத்தி தருமாறு கோரி தாயொருவர் கோப்பாய் பொலிஸாரிடம் இன்றைய தினம் புதன்கிழமை ஒப்படைத்துள்ளார்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உரும்பிராய் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் க.பொ.த சாதாரண தர பரீட்சையின் வீட்டில் இருப்பதாகவும், அந்நிலையில் கடந்த 2 வருட காலமாக போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளமையால், மகனை திருத்தி தருமாறு கோரி கோப்பாய் பொலிஸாரிடம் தாயார் ஒப்படைத்துள்ளார்.
குறித்த இளைஞனை நாளைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட உள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.