சூரிய கிரகண நாளில் பொது விடுமுறை அறிவித்த ஒடிசா அரசு..!!
தீபாவளிப் பண்டிக்கைக்கு மறுநாள் வரும் 25-ம் தேதி சூரிய அஸ்தமனத்துக்கு முன், பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும் என்றும், இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் இதை பார்க்க முடியும் என்றும் மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், வடகிழக்கு இந்தியாவின் ஒருசில பகுதிகளிலிருந்து இந்த கிரகணத்தை பார்க்க முடியாது. கிரகணம் முடிவடைவதை சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு காண முடியாது. இந்த சூரிய கிரகணத்தை சிறிது நேரம் கூட வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஒடிசா அரசு அக்டோபர் 25-ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், வங்கிகள் செவ்வாய்கிழமை அன்று மூடப்பட்டிருக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.