அயோத்தி கோயிலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி..!!
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள குஜராத்துக்கு சென்று பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கும் சென்று மோடி வழிபாடு நடத்தினார். கேதார்நாத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் நினைவிடத்தையும் அவர் பார்வையிட்டார். இந்நிலையில், பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் அயோத்திக்கு இன்று சென்றார். பிரதமர் வருகையை முன்னிட்டு அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி மாலை 5 மணிக்கு ஸ்ரீராம் லாலா விராஜ்மானுக்கு பூஜை செய்து வழிபட்டார். அதைத் தொடர்ந்து ராம ஜென்ம பூமி தலத்தை ஆய்வு செய்தார். மாலை 5.45 மணியளவில் ஸ்ரீராமருக்கு ராஜ்யா அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார். மாலை 6.30 மணியளவில் சரயு நதியின் புதிய படித்துறையில் ஆரத்தியை பார்வையிடும் அவர், பிரமாண்ட தீப உற்சவத்தையும் மோடி தொடங்கி வைக்கிறார். தீப உற்சவத்தின் 6-வது பதிப்பு இந்த ஆண்டு நடக்கிறது. இதில் மோடி முதல் முதலாக நேரடியாக கலந்து கொள்கிறார். 18 லட்சம் தீபம் இந்த நிகழ்ச்சியில் ஏற்றப்படுகிறது.