கேரளாவில் கல்வி முறை சரியில்லை என்பது தான் என் கருத்து – கவர்னர் ஆரிப் முகமது கான்..!!
கேரளா கவர்னர் ஆரிப் முகமது கான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- கேரளாவில் துணை வேந்தர்கள் நியமனத்தில் யுஜிசி விதிமுறைகளை பின்பற்றாதது தான் பிரச்சனை. இதை உச்ச நீதிமன்றமும் சுட்டி காட்டி உள்ளது. துணைவேந்தர்களுக்கு அடுத்த மாதம் 3ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. துணை வேந்தர்கள் இன்று ஏன் ராஜினாமா செய்யவில்லை என நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராஜினாமா செய்யாததற்கு விளக்கம் கூற வேண்டும். 9 பல்கலைக்கழகங்கள் மட்டும் இன்றி மேலும் இரண்டு பல்கலைக்கழகங்கள் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னணியில் இந்த நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். கேரளாவில் கல்வி முறை சரியில்லை என்பது தான் என் கருத்து. திறமையானவர்கள் கேரளாவில் இருக்க விரும்பவில்லை. அவர்கள் வெளியேற முயற்சிக்கின்றனர். இது தான் கேரளாவின் பிரச்சனை. திறமையானவர்கள் நாட்டை விட்டு வெளியேறி, திறமையற்றவர்கள் நாட்டை ஆள்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.