வவுனியா “ஐக்கிய நட்சத்திரம்” விளையாட்டுக் கழகம் நடாத்திய மாபெரும் மென்பந்து சுற்றுப் போட்டி!! (படங்கள்)
தீபாவளி தினத்தை முன்னிட்டு ஐக்கிய நட்சத்திரம் விளையாட்டுக் கழகம் நடாத்திய மாபெரும் மென்பந்து (கிரிக்கட்) சுற்றுப் போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் திரு.மயூரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வவுனியா நகரசபை உறுப்பினர் திரு.சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களும், கௌரவ விருந்தினராக ஸ்டார் நிறுவன உரிமையாளர் திரு.ஜெகன் மற்றும் துர்க்கா நிறுவன உரிமையாளரும் புளொட் தோழருமான திரு.சங்கர் அவர்களும் ஐக்கிய நட்சத்திரம் விளையாட்டுக் கழக முன்னாள் உறுப்பினர்களும் கலந்து கொண்டு இறுதிப் போடடியினை ஆரம்பித்து வைத்ததுடன்
இறுதிப் போடடியானது ரொக்கெட் விளையாட்டுக்கழகம் எதிர் சிங்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ரொக்கெட் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. முதலிடம், இரண்டாமிடமென வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறப்பு வீரர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.