;
Athirady Tamil News

சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம் !!!

0

யால தேசிய பூங்காவில் வன விலங்குகளை துன்புறுத்தும் வகையில் செயற்பட்ட குழுவினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குறித்த குழுவினருக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமையவே, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்தார்.

அதன்படி, குறித்த நபர்களின் அடையாள அட்டை இலக்கம், முகவரி, வாகன இலக்கம் மற்றும் முறையற்ற நடத்தையை நிரூபிக்கக்கூடிய அனைத்து ஆதாரங்கள் உட்பட அனைத்து தகவல்களும் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் இருப்பதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், அந்தக் குழுவினர், விசேட அனுசரணையின் கீழ் யால தேசிய பூங்காவுக்கு செல்லவில்லை எனவும் அனைவரும் சாதாரண சுற்றுலாப் பயணிகள் குழு என்றும் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.