பழப்புளி வைத்திருந்தவருக்கு 2 வார விளக்க மறியல்!!
யாழ் நகரில் மனிதப் பாவனைக்குதவாத நிலையில் பழப்புளியை வைத்திருந்த களஞ்சிய உரிமையாளரை இரண்டு வாரங்கள் விளக்கமறியலில் வைக்கவும், கைப்பற்றப்பட்ட பழப்புளியை அழிக்கவும்
யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்றையதினம் புதன்கிழமை உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள களஞ்சியம் ஒன்றில் 6000 கிலோகிராம் வரையான மனிதப் பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை அருவருக்கதக்கவகையில் சுகாதாரமின்றி பொதியிட்டுக் கொண்டிருந்தநிலையில்,
நேற்று மாலை பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவினரால் களஞ்சியம் முற்றுகையிடப்பட்டது.
களஞ்சிய உரிமையாளருக்கு எதிராக இன்றைய தினம் யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றில் யாழ் நகர பொதுச்சுகாதார பரிசோதகர் சஞ்ஜீவனால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் களஞ்சிய உரிமையாளரை இரண்டு வாரங்கள் விளக்கமறியலில் வைக்கவும், கைப்பற்றப்பட்ட பழப்புளியை அழிக்கவும் யாழ்ப்பாண மேலதிக நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டதுடன் எதிர்வரும் 9ம் திகதி வரை குறித்த வழக்கை நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.