தினசரி பாதிப்பு 2-வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது..!!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 196 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக நேற்று ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. அதாவது நேற்று 862 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 830 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 45 ஆயிரத்து 768 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,771 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 95 ஆயிரத்து 180 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை நேற்றை விட 942 குறைந்துள்ளது. அதாவது, தற்போது 21,607 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை. கேரளாவில் விடுபட்ட ஒரு பலியை கணக்கில் கொண்டு வந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,28,981 ஆக உயர்ந்துள்ளது.