ஆரோக்கிய மனநலம் குறித்து இளைஞர்களுக்கு பயிற்சி- மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை..!!
பொதுமக்களுக்கும் இளைஞர்களுக்கும் ஆரோக்கிய மனநலம் குறித்து கற்பித்து வழிகாட்ட வாழும் கலை அமைப்புடன் மத்திய கலாச்சார அமைச்சகம் இணைந்துள்ளது. இந்த திட்டத்தை பெங்களூருவில் உள்ள வாழும் கலை அமைப்பின் சர்வதேச தலைமையகத்தில் அந்த அமைப்பின் நிறுவனர் பண்டிட் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தொடங்கி வைத்தார். கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் இருபதாயிரம் பேர் பங்கேற்றனர்.
இந்த திட்டத்தின்படி வாழும் கலை அமைப்பின் ஆசிரியர்கள், தியானப் பயிற்சியாளர்கள், பிரதிநிதிகள், பொது நல ஆர்வலர்கள் பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும் மனநலம் குறித்த பயிற்சிகளை வழங்குகின்றனர். சிறந்த ஆரோக்கியத்தை நோக்கி இளைஞர்களுக்கு வழிகாட்டவும், நாட்டின் எதிர்காலத்தை உறுதிமிக்க வகையில் உருவாக்கவும் இந்தத் திட்டம் பல கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று மத்திய கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.