நிலக்கரி உற்பத்தியில் புதிய சாதனை..!!
இந்தியா நிலக்கரி உற்பத்தியில் புதிய சாதனை படைத்திருப்பதாக ”கேர்எட்ஜ்” ஆய்வு நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது. 2023-ம் நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 35 கோடி டன்னை தாண்டும் என அது ஏற்கனவே கூறியிருந்தது. அதன்படி தற்போது நிலக்கரி உற்பத்தி 38.2 கோடி டன்னை எட்டி புதிய சாதனை படைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 21 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த உற்பத்தியில் கோல் இந்தியா நிறுவனத்தின் பங்கு பெரிய அளவில் உள்ளது. நிதியாண்டின் அடுத்த அரையாண்டில் நிலக்கரி உற்பத்தி 50 கோடி டன்னை எட்டும் என ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.