இ.தொ.காவுக்கு நான் விடுத்த அழைப்பு சாத்தியப்பட்டுள்ளது!!
மலையகத் தமிழர்களின் எழுச்சி, வளர்ச்சியில் இரட்டை குழல் துப்பாக்கியாகச் செயற்படுவோம் என இ.தொ.காவுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். அது தற்போது சாத்தியப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
மலையகம் இன்று ஒளிர்கிறது, ஒரு சிங்கமாக, புலியாக எழுச்சி பெறுகின்றது. நாங்கள் உழைக்க மட்டும் இங்கு வரவில்லை, ஆளவும்தான் வந்துள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமையகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு சற்று முன்னர் உரையாற்றும்போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.