வவுனியா கந்தசாமி ஆலயத்தில் பக்தர்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்ற சூரசம்காரம்!! (படங்கள்)
வவுனியாவில் பிரசித்தி பெற்ற வவுனியா கந்தசாமி ஆலயத்தில் பக்தர்கள் புடைசூழ சூரசம்கார நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்காக சைவ மக்கள் அனுஸ்டிக்கும் விரதங்களில் மிக முக்கிய விரதமாக கந்தசஷ்டி விரதம் விளங்குகின்றது.
கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்றையதினம் (30.10) முருகன் ஆலயங்களில் சூரன்போர் இடம்பெறும். அந்தவகையில் வவுனியாவின் சிறப்பு மிகு வவுனியா கந்தசாமி ஆலயத்தில் மேளதாள வாத்திய இசை முழங்க, அந்தணச் சிவாச்சாரியர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஆலயத்தில் இருந்து வெளி வீதிக்கு வந்த வந்த முருகப் பெருமான் மணிக்கூட்டு கோபுர சந்தி உள்ளடங்கிய ஏ9 வீதியில் சூரனுடன் போர் செய்து சூரனை வதம் செய்து பக்த அடியார்களுக்கு அருள்பாலித்தார்.
இதேவேளை, வவுனியா தாண்டிக்குளம் முருகன் கோவில், நெளுக்குளம் முருகன் ஆலயம், கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயம், பழனி முருகன் ஆலயம் உட்பட வவுனியா மாவட்டத்தில் உள்ள பல முருகன் ஆலயத்தில் சூரசம்காரம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.