குழந்தைகளுக்கான பற்சிதைவும் அறிகுறிகளும் !! (மருத்துவம்)
பல்வலி என்பது, மிகக் கொடுமையானது மற்றும் மன அழுத்தம் தரக்கூடியது, அதுவும், குழந்தைகளுக்கு பல்லில் தொற்று ஏற்பட்டால், கேட்க வேண்டியதில்லை.
பற்சிதைவு என்பது, பல்லில் ஏற்படும் குழிகள், பல்லை சரியாக துலக்காவிட்டால் ஏற்படும் பிரச்சினையாகும்.
உரிய நேரத்தில் பற்சிதைவை குணப்படுத்தாவிட்டால், பல்லை முற்றிலும் இலக்கும் நிலைமை ஏற்படலாம். குழந்தைகளைப் பொறுத்தவரை, பற்களை சரியாக விளக்கினால், பற்சிதைவைத் தவிர்க்கலாம்.
ஏதேனும் காரணத்தால், குழந்தைகளுக்கு பல்லில் தொற்று ஏற்பட்டால், அறிகுறிகளைக் கண்டுபிடித்து, பல் வைத்தியரிடம் உடனடியாகக் காண்பிக்க வேண்டும்.
அறிகுறிகள்
சூடான அல்லது குளிர்ந்த உணவை உண்ணும் போது, உங்கள் குழந்தை கூசுகிறது என்று கூறினால, அது ஆபத்தின் அறிகுறி. பற்களில் அல்லது ஈறுகளில் ஏதேனும் தொற்று இருப்பதை அது உணர்த்துகிறது. இதனால் உணவைக் கடிக்கும் பொழுது, அல்லது மெல்லும் பொழுது பல்லில் கூச்சம் அல்லது வலி ஏற்படும். அப்படி இருக்கும் போது, உங்கள் குழந்தையின் வாயை நன்றாகக் கழுவவும்.
தொற்றால், வாயில் கசப்புத்தன்மை ஏற்படலாம். பல்லில் தொற்று ஏற்பட்டதற்கு, கசப்புத் தன்மை மற்றுமோர் அறிகுறி. வாயைக் கழுவிய பின்பும் துர்நாற்றம் அடித்தால், குழந்தையை வைத்தியரிடம் அழைத்துச செல்ல வேண்டும்.
உங்கள் குழந்தைப் பற்களில் தொல்லை என்று சொன்னால், முதலில் ஈறுகளைச் சரிபாருங்கள். ஈறுகள் முழுவதும் இளஞ் சிவப்பு நிறத்தில் இருந்தால், அது நலம். சில இடங்கள் வீக்கமடைந்தோ அல்லது அடர்ந்த சிவப்பு நிறத்தில் இருந்தால், அது தொற்றின் அறிகுறி.
நீண்ட நாள்களுக்கு தொற்று இருந்தால், சிறிய கருப்புப் புள்ளி வளர்ந்து விடும். மற்ற பற்களை விட அந்தப் பல் அடர்ந்த நிறத்தில் தெரியும். உங்கள் குழந்தையின் பற்களை, அவ்வப்போது இந்த அறிகுறிக்காகப் பாருங்கள்.
உங்கள் குழந்தை, பல்லில் குத்தும் வலி இருக்கிறது என்று கூறினால், அது பற்சிதைவாக இருக்கலாம். தொற்று ஆழமாகச் சென்றால், அது பெரிய தொல்லையாகிவிடும். ஏனென்றால் எதை உண்டாலும் கடுமையான வலி ஏற்படும். நாளடையில் பல்லை இழக்க வேண்டி ஏற்படலாம்.