;
Athirady Tamil News

வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த அனைவரதும் ஒத்துழைப்பு தேவை! நீதி அமைச்சர்யாழில் தெரிவிப்பு!!!

0

வடக்கில் அதிகரித்துள்ள போதை பொருள் பாவனை கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரால் மாத்திரம் முடியாது அனைவரதும் ஒத்துழைப்பு தேவை என நீதி அமைச்சர் விஜயதாச ராஐபக்ச தெரிவித்தார் இன்று யாழ்ப்பாணத்தில் நடமாடும் சேவை ஆரம்பித்து வைத்தபின் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

தற்போது வடக்கில் ஒரு புதிய பிரச்சனை உருவாகி வருகிறது இலங்கை முழுவதும் இந்த போதைப் பொருள் பிரச்சனை ஒரு பெரிய பிரச்சினையாக காணப்படுகின்றது ஆனால் வடபகுதியில் அது மிகவும் அதிகளவில் காணப்படுகிறது கடந்த 2 மாதத்திற்குள் 508 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் எதிர்கால இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் செயற்பாடு தொடர்பில் ஒரு பொறுப்பாக செயற்பட வேண்டியுள்ளது

அந்த விடயத்தை தடுப்பதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டியதாக உள்ளது குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இருந்த போதைப்பொருள் பாவனை மிக அதிக அளவில் காணப்படுகின்றது கடந்த ஒரு சில மாதங்களாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன

அதேபோல் போதைப் பொருள்களுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் இது ஏனைய இடங்களோடு ஒப்பிடும் போது அதிகளவாக காணப்படுகின்றது இது ஒரு விபரீதமான ஒரு செயல்பாடாக காணப்படுகின்றது சிறுவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் பாரதூரமான செயற்பாடாக காணப்படுகிறது

அத்தோடு இந்த விடயம் போதைப்பொருள் வியாபாரிகளால் உருவாக்கப்படுகிற செயற்பாடாக காணப்படுகின்றது அதாவது குறிப்பாக யாழ் மாவட்டம் மிகவும் ஒரு பாதிப்பான நிலையில் காணப்படுகின்றது இந்த நாட்டின் பிரஜை என்ற ரீதியில் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக நாங்கள் உடனடியாக ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக முப்படையினர் பொலீசார் அனைவரையும் இணைத்து இதனை தடுப்பதற்கான நடவடிக்கை உடனே எடுப்பதற்கு நான் தயாராக உள்ளேன்

குறித்த பிரச்சனையினை ஆராய்வதற்காக இந்த விசேட கூட்டம் ஒன்றினை கூட்ட உள்ளேன் மக்களின் பிரதிநிதிகளையும் இந்த கூட்டத்திற்கு அழைக்க உள்ளேன் இந்த கூட்டத்தில் ஆராய்ந்து இந்த கூட்டத்தின் மாலை 4 மணியளவில் வடக்கு மாகாணஆளுநர் தலைமையில் கூட்டத்தினை கூட்ட உள்ளேன் அந்தக் கூட்டத்தில் சமூகமட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பலரையும் ஒன்றிணைத்து இந்த போதைப் பொருள் பாவனை கட்டுப்படுத்துவதற்கு உபரியான செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பில் நான் ஆராயவுள்ளேன் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.