ராஜஸ்தானின் மங்கார் தாம் தேசிய நினைவு சின்னமாக அறிவிப்பு..!!
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் மங்காருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றார். அங்கு 1913-ம் ஆண்டு சமூக சீர்திருத்தவாதி கோவிந்த் குரு தலைமையில் போராடிய 1,500 பழங்குடியினரை ஆங்கிலேயே ராணுவம் கொன்று குவித்தது. அவர்களின் நினைவாக மங்காரில் பழங்குடியினர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அவருடன் ஒரே மேடையில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களின் முதல் மந்திரிகள் அசோக் கெலாட், சிவராஜ்சிங் சவுகான், பூபேந்திர படேல் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில், மங்கார் நினைவிடத்தை பிரதமர் மோடி தேசிய நினைவுச்சின்னமாக அறிவித்தார். அப்போது அவர் பேசுகையில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களும் மத்திய அரசின் தலைமையில் ஒன்றிணைந்து மங்கார் நினைவிடத்தை மேம்படுத்த வேண்டும். அதன்மூலம் இந்த இடத்துக்கு உலக அளவில் ஒரு அடையாளம் கிடைக்கும். நாம் அனைவரும் இந்த இடத்தை புதிய உயரத்துக்கு இட்டுச்செல்வோம். அதற்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என தெரிவித்தார்.