கராப்பிட்டிய வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு!!
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் உள் மற்றும் வெளிநோயாளர்களுக்கு தேவைப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளில் பற்றாக்குறை காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநோயாளர் பிரிவில் (OPD) சிகிச்சை பெற தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து செல்வதாகவும், மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்க காகித அட்டை இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், மருந்து விநியோகம் செய்ய காகித அட்டை இல்லை என்று மருத்துவமனையில் அறிவித்தல் போட்டுள்ளது.
இதேவேளை, E.C.G பரிசோதனை முடிவுகளை பதிவுசெய்ய போதுமான காகித நாடாக்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் 1,500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.