;
Athirady Tamil News

கேரளாவின் சந்தன பாறையில் பூத்துக்குலுங்கும் நீல குறிஞ்சி மலர்கள்..!!

0

அதிகாலை பொழுதில் தோட்டங்களில் பூத்து குலுங்கும் மலர்களை பார்த்தால் மனம் குதூகலிக்கும். இதிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குறிஞ்சி மலர்களை பார்த்தால் அது தரும் பரவசத்திற்கு இணை ஏதும் இல்லை. இயற்கையின் அருங்கொடைகளில் ஒன்றான இத்தகைய மலர்கள் மலையோர பகுதிகளில் மட்டுமே காணப்படும். அந்த வகையில் தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரி பகுதிகளில் குறிஞ்சி பூக்கள் பூப்பது வழக்கம். இதில் கேரளாவின் இடுக்கி மலை பகுதியில் தற்போது நீல குறிஞ்சி பூக்கள் பூத்து குலுங்குகின்றன. சாலையோரம் மனதை மயக்கும் வண்ணம் பூத்து கிடக்கும் இப்பூக்கள் அந்த வழியாக செல்வோரை சில நிமிடங்கள் நிற்க வைத்து விடுகிறது. இடுக்கிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் நீல குறிஞ்சி மலர்களை பார்த்து மனதை பறிகொடுத்து செல்கின்றனர். அவர்களில் பலரும் இதனை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த காட்சிகள் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இடுக்கியின் சந்தனபாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் படை எடுத்து வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.