கல்முனை தலைமைக பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் கடற்கரை பள்ளிவாசல் சுற்றுச்சூழல் சிரமதானம்!! (படங்கள் & வீடியோ)
கல்முனை தலைமைக பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் கடற்கரை பள்ளிவாசலை அண்டிய பல பகுதிகள் இன்று சிரமதானம் செய்யப்பட்டன.
அம்பாறை மாவட்டம் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திகவின் ஆலோசனைக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலினூடாக இச் சிரமதான பணியினை பொலிஸார் முன்னெடுத்தனர்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடனும் டெங்கு நோயின் தாக்கத்தை இப்பிரதேசத்தில் கட்டுப்படுத்தும் முகமாகவும் குப்பைகூழங்கள் காடுமண்டிய இடங்கள் யாவும் துப்பரவு செய்யப்பட்டன.
இதன்போது வீதியோரங்களில் தேங்கிக் காணப்பட்ட கழிவுகளை பொலிஸார் அவ்விடத்தில் இருந்து அகற்றி சுத்தப்படுத்தி சூழலை அழகுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி நடவடிக்கையின் போது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சமூக சேவை பொலிஸ் பிரிவு சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவு போக்குவரத்து பிரிவு சிறு குற்றத்தடுப்பு பிரிவு இபெருங் குற்றத்தடுப்பு பிரிவு சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவு என்பன பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”