குஜராத் சட்டசபை தேர்தல்- முதல்வர் வேட்பாளரை அறிவித்தது ஆம் ஆத்மி கட்சி..!!
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதியை அறிவித்தவுடன் ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நிச்சயமாக வெற்றிபெறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்தார். இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த உள்ளார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சி சார்பில் நடத்தப்பட்ட சர்வேயின் அடிப்படையில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது.