;
Athirady Tamil News

யாழில். கடந்த 11 மாதங்களில் டெங்கினால் 08 பேர் உயிரிழப்பு!!

0

யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மாதங்களில் டெங்கு காய்ச்சலினால் , 2774 பேர் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் , 08 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் யாழ் மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்து செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நவம்பர் 4ஆம் திகதி வரையிலான கால பகுதியில் 2774 வரையானோர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த வருடத்தில் 8 டெங்கு நோய் இறப்புக்கள் பதிவாகியுள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து மாத ரீதியாக பார்க்கின்ற பொழுது ஜனவரி மாதத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்து மே ஜூன் மாதமளவில் ஒரு அதிகரித்த பரம்பல் காணப்பட்டது.

பின்பு குறைவான நிலை காணப்பட்டு கடந்த ஒக்ரோபர் மாதம் முதல் மீண்டும் டெங்கு நுளம்பானது அதிகரித்து செல்வதை நாங்கள் அவதானிக்க கூடியதாக உள்ளது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.