;
Athirady Tamil News

சந்திர கிரகணத்தையொட்டி 8-ந் தேதி 11 மணிநேரம் ஏழுமலையான் கோவில் மூடப்படுகிறது தேவஸ்தானம் தகவல்..!!

0

வருகிற 8-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்று காலை 8.40 மணியில் இருந்து இரவு 7.20 மணி வரை 11 மணிநேரம் மூடப்படுகிறது. இதனால் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கான தேதி, நேரம் குறிப்பிட்ட டோக்கன்கள் வழங்குவது, வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் அனுமதிப்பது, ஸ்ரீவாணி திட்ட அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கும் பக்தர்களுக்கான தரிசனம், ரூ.300 தரிசனம், ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கிரகணம் முடிந்த பிறகு வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் 2-ல் இருந்து மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.கிரகணம் நேரத்தில் திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடம், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட மாட்டாது. அன்று இரவு 8.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்படும். எனவே பக்தர்கள் திருமலைக்கு வரும் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.