எகிப்து செல்கிறார் ஜனாதிபதி ரணில் !!
காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (06) எகிப்துக்கு பயணமாகவுள்ளார்.
எகிப்தின் ஷார்ம் அல் ஷெய்க்கில் நாளை 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மாநாடு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், அதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார்.