நல்லூரில் இருந்து கதிர்காமத்திற்கு திருத்தல தரிசன யாத்திரை!! (படங்கள்)
இலங்கையில் நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கு இடையேயான பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி யாழ்ப்பாணத்தில் இருந்து , கதிர்காமத்திற்கு புனித திருத்தல தரிசன யாத்திரை ஆரம்பமாகியுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை வழிபாடுகளை மேற்கொண்டு விசேட பஜனை வழிபாடுகளுடன் யாத்திரை ஆரம்பமாகியுள்ளது.
ஐப்பசி மாத திருக்கார்த்திகையை முன்னிட்டு , ஆரம்பமாகியுள்ள இந்த யாத்திரை ,மூன்று தினங்களாக கொண்டு, கைதடிப் பிள்ளையார் ஆலயம், முறிகண்டிப் பிள்ளையார் ஆலயம், தொடர்ந்து வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளி அம்மன் ஆலயம், தொடர்ந்து திருகோணமலை தென்கயிலை ஆதீனம், கன்னியாச் சிவன் ஆலயம், திருகோணமலை பத்திரகாளி அம்மன் ஆலயம், திருக்கோணேஸ்வரம் சிவன் ஆலயம் தொடர்து மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இரவு வேளை தங்கி தொடர்ந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம், மண்டூர் முருகன் ஆலயம் உட்படப் பல ஆலய தரிசனங்களுடன் கதிர்காமக் கந்தன் ஆலயம் சென்று அங்கு பூசை வழிபாடுகளில் கலந்து கொள்வதுடன் அடியார்கள் தமது நேர்த்திகளை நிறைவேற்றி மீண்டும் யாழ்ப்பாணம் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”