எகிப்துக்கு பறக்கும் முன் ஜனாதிபதி அதிரடி!!
காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, இன்று (06) காலை எகிப்துக்கு பயணமானார்.
எகிப்தின் ஷார்ம் அல் ஷெய்க்கில் இன்று (06) ஆரம்பமாகும் மாநாடு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், அதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார்.
இந்நிலையில், நான்கு அமைச்சுகளை தனது அதிகாரத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொண்டுவந்துள்ளார்.
அரசியலமைப்பின் 44/3 பிரிவுக்கு அமைய, பிரதமரின் வினவியத்தின் பின்னர், இந்தத் தீரமானத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ளார்.
அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயகவினால் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார மேம்பாடு மற்றும் தேசிய கொள்கைக்கான அமைச்சு, தொழில்நுட்ப அமைச்சு, பெண்கள் குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சு மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு ஆகிய நான்கு அமைச்சுகளையும் தனது அதிகாரத்தின் கீழ் ஜனாதிபதி கொண்டுவந்துள்ளார்.