பட்டியலை பார்க்காவிடின் பாதீடு தோற்கும் !!
2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் முன்வைத்துள்ள பெயர்கள் அடங்கிய பட்டியலில் உள்ள பெயர்களை உள்ளடக்கி புதிய அமைச்சரவையை நியமிக்காவிடின், பட்ஜெட் (பாதீடு) தோற்கடிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வு கூறியுள்ளது.
புதிய அமைச்சரவைக்குள் தங்களுடைய குழு சார்பில் உள்ளடக்க வேண்டிய பெயர் பட்டியலை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரனமுன சமர்ப்பித்துள்ளது. எனினும், புதிய அமைச்சரவையை நியமிப்பது காலந்தாழ்த்தப்படுகின்றது. இதனால், பெரமுனவுக்குள் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவைக்குள் உள்வாங்க வேண்டியவர்கள் தொடர்பிலான பெயர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்களை புதிய அமைச்சரவைக்குள் இணைத்துக்கொள்ளாவிடின், 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோல்வியடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரவு- செலவுத் திட்டம் அவ்வாறு தோற்கடிக்கப்படுமாயின். அவரசமாக பொதுத் தேர்தலொன்றை சந்திக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் அக்கட்சி எதிர்வுகூறியுள்ளது.