இளவாலை பொலிஸாரினால் மூவர் கைது!!
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸாரினால் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளவாலை பொலிஸார் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திடீர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு, சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த வாகனங்களை வழிமறித்து சோதனையிட்டனர்.
அதன் போது அப்பகுதி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த கோண்டாவில் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவரை சோதனையிட்ட போது அவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டனர்.
அதேவேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளவாலை பகுதியை சேர்ந்த இளைஞனை சோதனையிட்ட போதும் அவரிடம் இருந்தும் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
அதனை அடுத்து கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களையும் இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”