;
Athirady Tamil News

35 வயதிற்கு மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க வேண்டும்!!

0

பட்டதாரி நியமனத்தில் 35 வயதிற்கு மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறு வடமாகாண பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் சிவசுப்பிரமணியம் லோகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

35 வயதிற்கு மேற்பட்ட 8000 பட்டதாரிகள் பாடசாலை ஆசிரியர் பயிற்சிக்காக காத்திருக்கிறார்கள்.

அரசாங்க சேவையில் 35 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகளை நியமனத்திற்கு உள்வாங்கியது போல 35 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகளாக இருக்கின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இந்த சந்தர்பத்தில் உள்வாங்கப்பட வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க வின் ஆட்சிக்காலத்தில் தொண்டராசிரியர்கள் நூறு நாட்கள் பாடசாலையில் தேசிய பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பயிற்சியின் பின்னர் சட்டப்பிரமாணங்களின் படி ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டார்கள்.

அதேபோல் 2018ம் ஆண்டு தேசிய பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நேர்முக மற்றும் பரீட்சை மூலமும் உள்வாங்கப்பட்டார்கள்.

இந்நிலையில் எம்மை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு பரீட்சை ஒன்றை வைத்து அதன் மூலம் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆனால் தற்போது அரசாங்கம் இருக்கும் சூழ்நிலையில் எம்மை பரீட்சை மூலம் உள்வாங்குவதற்கு நிதி உட்பட பல இடர்பாடுகள் காணப்படுகின்றது.

அதனை சமாளிப்பதற்காக எமது அரசாங்கத்திற்கு நாம் செய்யும் தியாகமாக எம்மை ஒரு வருடகாலத்திற்கு அபிவிருத்தி உத்தியோகத்தராக இருந்து அதன் பின் எம்மை ஆசிரியர் சேலைக்குள் உள்வாங்கினால் அரசாங்கத்திற்கு செய்யும் தியாகமாக அமைவதுடன் அரசாங்கத்தின் நிதி பிரச்சினைக்கும் தீர்வாக அமையும் என தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.