பரமேஸ்வராக்கல்லூரியின் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு! (படங்கள்)
திருநெல்வேலி பரமேஸ்வராக்கல்லூரியின் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது.
பரமேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளை ஏற்பாட்டில், பேராசிரியர் திருமதி சுபதினி ரமேஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட பரமேஸ்வரா கல்லூரி நூற்றாண்டு விழா சிறப்பு மலரை செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் வெளியிட்டு வைக்கவுள்ளார். யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் இந்து நாகரிகத் துறைத் தலைவர் கலாநிதி ச. முகுந்தன் மற்றும் சைவ சித்தாந்தத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் த. செல்வமனோகரன் ஆகியோர் நூல் மதிப்பீட்டுரைகளை நிகழ்த்தவுள்ளனர்.
மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மற்றும் சேர். பொன். இராமநாதன் கட்புல ஆற்றுகைக் கலைகள் பீட மாணவிகளின் விசேட நடன நிகழ்வுகளும் இந்த நிகழ்வில் அரங்கேற்றப்படவுள்ளன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”