;
Athirady Tamil News

சீரற்ற காலநிலை தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!! (PHOTOS)

0

காலநிலை மாற்றத்தால், யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை தொடர்பில் விசேட கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவத்தின் ஏற்பாட்டில் , மாவட்ட செயலரின் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பிரதேச செயலர்கள் , பிரதேச சபை தவிசாளர் , முப்படைகள், பொலிஸார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சீரற்ற கால நிலையினால் ஏற்படவுள்ள பாதிப்புக்களில் இருந்து மக்களை பாதுகாத்தல் , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்தல் , பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகள் வழங்கல் , மற்றும் நிவாரணங்கள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.