தமிழகத்தில் வரும் 14ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்..!!
தென்மேற்கு வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதையடுத்து, வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது.
இதன் எதிரொலியால் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மேலும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.
இந்நிலையில், இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையக்கூடும் என்றும் இதனால் தமிழகத்தில் இன்று முதல் 14ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.