;
Athirady Tamil News

இந்து அமைப்பு எதிர்ப்பு.. பெங்களூரு நிகழ்ச்சியை ரத்து செய்த ஸ்டாண்ட் அப் காமெடியன்..!!

0

பிரபல நகைச்சுவை நடிகர் வீர் தாஸ், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அவரது நிகழ்ச்சிக்கு இந்து அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இந்து ஜனஜக்ருதி சமிதி அமைப்பினர் வயாலிகாவல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வீர் தாசின் நிகழ்ச்சி இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், இந்தியாவை மோசமான வகையில் சித்தரிப்பதாகவும் இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர். இந்நிலையில் பெங்களூரு நிகழ்ச்சியை ரத்து செய்வதாக நடிகர் வீர் தாஸ் அறிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ள அவர், தவிர்க்க முடியாத காரணங்களால் பெங்களூரு நிகழ்ச்சியை தள்ளி வைப்பதாகவும், நிகழ்ச்சி தொடர்பான புதிய தகவல் மற்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறி உள்ளார். மேலும், ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.