பல நோய்களை தீர்க்கும் முடக்கற்றான் கீரை!! (மருத்துவம்)
முடக்கற்றான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது. முடக்கற்றான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும் உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்டாகப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும். இந்தக் கீரையை சிறிதாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம். கொடியை மிளகு சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம்.
துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம். அத்தோடு, அடை செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் கீரையை அரைத்துச் சேர்த்துக்கொள்ளலாம்.
முடக்கற்றான் கீரையில் விற்றமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கற்றான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூலநோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.
இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்துக் கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.
வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கற்றான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேசைக் கரண்டி போதும். இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.
பொதுவாக வயது ஆக ஆக மூட்டுவலி பெரும்பாலானவர்களுக்கு வந்துவிடுகிறது. அதற்குப் பலக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் எல்லா வயதினருக்குமே மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகள் இயல்பான ஒன்றாகிவிட்டன. இதற்குக் காரணம் மூட்டுக்களில் தங்கிய யூரியா அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி, சுண்ணாம்பு, பொஸ்பரஸ் படிவங்கள்தான்.
இவைகளைக் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கற்றான் கீரைக்கு உண்டு. கீல்பிடிப்பு , கிரந்தி, கரப்பான், பாதத்தை பிடித்த வாதம், மலக்கட்டு பேன்றவை அனைத்து நோய்களும் முடக்கற்றான் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் குணமடைந்துவிடும்.
முடக்கற்றான் கீரை மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு அறியக் கீரையாகும். குறிப்பாக கிராமங்களில் எல்லா வீடுகளிலும் இது படர்ந்துக் காணப்படும்.
இதை தொடர்ந்து உண்டுவந்தால் முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற நோய்கள் நம்மை நெறுங்காது.
குறைந்தது மாதம் இருமுறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கற்றான் என்று இப்பொழுது அழைக்கப்படுகின்றது.
தோசை செய்து சாப்பிடலாம்…
2 கோப்பை புழுங்கல் அரிசியை ஊறவைத்து, அத்துடன் இரண்டு கைப்பிடி கீரையையும், சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து, தோசைப் போல் சுட்டு சாப்பிடலாம். இது சற்று மருந்து வாசனையுடன் இருக்கும். நல்ல காரமான சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
மலச்சிக்கல், வாயு, வாதம் குணமாக :
வாரம் ஒருமுறை முடக்கற்றான் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம், மலச்சிக்கள் சம்பந்தப்பட்ட எல்லாக் நோய்களும் நீங்கும்.
ரசம் தயாரிக்க ஒரு சின்ன டிப்ஸ் :
கை பிடியளவு முடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு டம்ளரளவு தண்ணீர் வீட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து அந்த நீரை மட்டும் வடித்து சாதாரண புளி இரசம் தயாரிப்பது போல் தயாரித்துக் கொள்ளலாம்.
மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்பட முடக்கற்றான் இலையை வதக்கி அடிவயிற்றில் கட்டிவந்தால் மாதவிலக்கு பெண்களுக்கு சீரான முறையில் நடைபெறும்.
வாரம் ஒருமுறை முடக்கற்றான் கீரையை அரைத்து தலையில் தேய்து 5 நிமிடம் ஊர வைத்துக் குளிக்கவும் இதுபோல் தொடர்ந்து மூன்றுமாதங்கள் வரை செய்து வந்தால் முடி உதிர்தல் குறைந்துவிடும், நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.