;
Athirady Tamil News

ரெயில் வழித்தடங்கள் முழுவதும் மின்மயமாக்கல்- பணிகள் தீவிரமாக நடைபெறுவதாக இந்திய ரெயில்வே தகவல்..!!

0

நாடு முழுவதும் அகல ரெயில் பாதைகள் அனைத்தையும் மின்மயமாக்கும் இலக்கை அடைய இந்திய ரெயில்வே தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் எரிவாயு பயன்பாடு மேம்பட்டு அதற்கான செலவு குறைவதோடு, வெளிநாட்டு பரிமாற்றத்தில் பன்மடங்கு சேமிப்பும் ஏற்படும் என்று ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2022-23-நிதியாண்டில் கடந்த அக்டோபர் வரை 1,223 கிலோ மீட்டர் வழித்தடங்களை இந்திய ரெயில்வே மின்மயமாக்கியுள்ளது. இது கடந்த 2021-22 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மின்மயமாக்கல் பணிகளை விட 36.64% அதிகமாகும். இந்திய ரெயில்வேயின் வரலாற்றில் 2021-22 நிதியாண்டில் அதிகபட்சமாக 6,366 கிலோமீட்டர் வழித்தடங்கள் மின் மயமாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டன. இதற்கு முன்னர் 2020-21-இல் 6,015 கிலோமீட்டர் வழித்தடங்கள் மின் மயமாக்கப்பட்டன. கடந்த மாதம் வரை இந்திய ரெயில்வேயின் 65,141 கிலோமீட்டர் அகலப்பாதை வழித்தடங்களில் 53,470 கிலோமீட்டர் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இது மொத்த அகலப்பாதை மின்மயமாக்கல் பணியில் 82.08% ஆகும் என்று ரெயில்வே அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.