;
Athirady Tamil News

பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் இணக்கம் !!

0

இருபத்தோராவது அரசியலமைப்புத் திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புப் பேரவையை ஸ்தாபிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் கோரிக்கைக்கு அமைய இரு கூட்டங்கள் கடந்த 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெற்றன. இக்கூட்டங்களில் பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்புப் பேரவைக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர்கலந்துகொண்டனர்.

அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய அரசியலமைப்புப் பேரவைக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகருக்கு விரைவாக வழங்குவதற்கு பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் இணக்கம் தெரிவித்தனர். அதேபோன்று, பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத அங்கத்தவர்கள் மூவரை அரசியலமைப்புப் பேரவையின் அங்கத்தவர்களாக நியமிப்பதற்கு விண்ணப்பம் கோரி பத்திரிகை விளம்பரமொன்றை வெளியிடுவதற்கும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்குவதற்கும் இதன்போது உடன்பாடு எட்டப்பட்டது.

அதற்கமைய, பத்திரிக்கை விளம்பரத்தை தினசரி மற்றும் வார இறுதி பத்திரிகைகளில் பிரசுரிப்பதுடன், விண்ணப்பப் பத்திரத்தின் மாதிரி பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்திலும் பிரசுரிக்கப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.