6 பேரை விடுதலை செய்தது ஏற்கத்தக்கது அல்ல – ஜெய்ராம் ரமேஷ்..!!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற எஞ்சிய 6 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு விடுவிப்பதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி இதனை தெளிவாக விமர்சிக்கிறது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்ற நிலையை எடுக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த செயல்பாடு துரதிர்ஷ்டவசமானது. இந்தியாவின் ஆன்மாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு செயல்பட்டுவிட்டது. 6 பேர் விடுதலை முற்றிலும் தவறானது, துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.