;
Athirady Tamil News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் -பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான இறுதி முடிவு எடுக்குமாறு உத்தரவு!! (படங்கள், வீடியோ)

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 திகதி வரை மறுவிசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு கடந்த கடந்த வெள்ளிக்கிழமை(11) வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த விசாரணையின் போது மன்றில் பிரதான பரிசோதகரின் கைது தொடர்பில் ஆட்சேபனை எழுப்பி நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன் பிரதி வாதியான பொலிஸ் பரிசோதகரை குறித்த வழக்கில் இருந்து பிணையில் விடுதலை செய்யுமாறு பிரதிவாதி சார்பாக சட்டத்தரணிகள் விண்ணப்பங்களை முன்வைத்தனர்.

இதனை அடுத்து சட்ட மா அதிபர் திணைக்களம் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு இதுவரை இறுதி முடிவு ஒன்றையும் எடுக்கவில்லை என்பதனாலும் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் விசேட சட்டத்தரணி ஒருவரை நியமிப்பதற்காகவும் இவ்வழக்கு தொடர்பாக குறுகிய கால அவகாசம் மன்றில் கோரப்பட்டது.

மேலும் சந்தேக நபரது பிணை விண்ணப்பம் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் அடுத்த தவணையின் போது சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் நெறிப்படுத்தி இருந்தார்.

அத்துடன் குறித்த வழக்கு அல்லது வழக்கினை கல்முனை மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்துவதா அல்லது வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வது தொடர்பில் விரைவான ஒரு தீர்மானம் ஒன்றினை சட்ட மா அதிபர் திணைக்களம் மேற்கொள்ள வேண்டும் என மேல் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

இதே வேளை குறித்த வழக்கானது நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸினால் மறுதவணைக்காக எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

அத்துடன் கடந்த உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடைய சம்பவமாக கல்முனை – சாய்ந்த மருது பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்புக்கள் குறித்த விசாரணைகளில் பிரதான பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பிலான சாட்சிகளை மறைத்தமை தொடர்பில் அவரைக் கைது செய்ததாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர் அம்பாறை பொலிஸ் உப கராஜின் பொறுப்பதிகாரியாக செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.